இரண்டு வாரத்தில் ரூ.2000 உயர்ந்தது தங்க விலை.. என்ன காரணம்? !

  0
  1
  1

  திடீரென ஒரு நாளுக்கு ரூ.500 வீதம் தங்க விலை உயருவதற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் பல மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

  தங்க விலை கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தில் உள்ளது. இதுவரை இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டதில்லை. திடீரென ஒரு நாளுக்கு ரூ.500 வீதம் தங்க விலை உயருவதற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் பல மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த விலை உயர்வு ஏழை எளிய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  ttn

  மக்களுக்கு ஹார்ட் அட்டேக் வரவைக்கும் அளவிற்குத் தங்க விலை உயருவதன் காரணம் என்னவென்பதை பார்ப்போம். 

   * உலகளாவிய விகிதங்கள் அதிகமாகும் போது, அதன் எதிரொலியாக இந்தியப் பண்டக வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தை விலை ஏற்றம் நிகழும். கடந்த இரண்டு வாரத்தில் தங்க விலை சுமார் ரூ.2000 வரை உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ப்யூச்சர் தங்கத்தின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தது. அதே போல, வெள்ளியின் விலையும் 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவை இரண்டும் உயர்ந்ததற்குக் காரணம் சர்வதேசச் சந்தையின் எதிரொலி. 

  ttn

  * சர்வதேச சந்தையில் தங்க விலை, கடந்த வெள்ளிக்கிழமை அவுன்ஸூக்கு 27 டாலர்கள் அதிகரித்து 1555.15 டாலராக வர்த்தகமாகியது. வெள்ளிக்கிழமை மட்டும் 36 டாலரும், கடந்த வாரம் மொத்தமாக 100 டாலரும் உயர்ந்துள்ளது. 

  * இதற்கு ஒரு முக்கிய காரணம் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல். கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இது மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளது. அதன் காரணமாகத் தான் சர்வதேசச் சந்தையில் தங்க விலை உயர்ந்துள்ளது. 

  ttn

  * இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் கடந்த மூன்று ஆண்டை விடக் குறைவு. 2019 ஆம் ஆண்டு 831 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால். 2018 ஆம் ஆண்டிலோ  944 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அரசு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டும் இறக்குமதி குறையும் என்று கூறப்படுகிறது. இந்த காரணங்களால் தான் தங்க விலை உயர்ந்து வருகிறது என்றும் தங்க விலை இன்னும் உயரும் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன.