இரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி!

  0
  18
  ஹில்டா சர்ச்சில்

  சீனாவில் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

  சீனாவில் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

  ஹில்டா சர்ச்சில்

  இந்நிலையில் இரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். லண்டனில் வசித்து வந்த 108 வயது மூதாட்டி ஹில்டா சர்ச்சிலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 24 மணி நேரத்திலேயே உயிரிழந்தார். 1918 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலிலிருந்து தப்பிய ஹில்டா கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். ஹில்டா வருகிற 5 ஆம் தேதி தனது 109-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார். கொரோனா வைரஸால் இங்கிலாந்தில் உயிரிழந்தவர்கலில் ஹில்டாதான் அதிக வயதுஉடையவராவார்.