இரண்டாவது டி20.. இந்தியா தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை..! இந்திய வீரர்கள் பட்டியல்

  0
  1
  India vs South africa

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று மொஹாலில் நடைபெற உள்ளது.

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று மொஹாலில் நடைபெற உள்ளது.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆட இருக்கிறது. முதல்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது.

  India vs South africa

  இந்நிலையில் 2வது டி20 மொகாலியில் இன்று நடைபெற இருக்கிறது.

  இந்திய அணியின் துவக்க வீரர்கள் வரிசையில் இருந்த கேஎல் ராகுல் இத்தொடரில் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடு வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணிஷ் பாண்டே இருவரும் மீண்டும் இத்தொடரில் இடம் பிடித்து தங்களை நிரூபித்துக் கொள்ள காத்திருக்கின்றனர்.

  India vs South africa

  முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களான சஹால் மற்றும் குல்தீப் இருவரும் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் ராகுல் சஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. க்ருனால் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் என்பதால் அணிக்கு கூடுதல் பலமே.

  வேகப்பந்து வீச்சில் இத்தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடரில் இடம்பெற்றுள்ள தீபக் சஹர், கலீல் அஹமது மற்றும் நவதீப் சைனி ஆகிய மூவரில் இரண்டு இளம் வீரர்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

  *இன்றைய போட்டியில் இடம்பெற வாய்ப்பு உள்ள 11 இந்திய வீரர்கள்:*

  ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ராகுல் சஹர், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மது.