இரண்டாம் நாள் முடிவில்.. தடுமாறும் தென்னாபிரிக்கா… பந்துவீச்சிலும் இந்தியா ஆதிக்கம்!

  0
  2
  தென்னாபிரிக்கா,இந்திய

  இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. பந்துவீச்சிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. சதம் அடித்து அசத்தினார் துவக்க வீரர் அகர்வால். இவர் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த, கோலி மற்றும் புஜாரா நன்கு ஆடி வந்தனர். புஜாரா 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  

  ind vs sa

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 10 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தினார். ரகானே அரைசதம் கடந்த பிறகு ஆட்டமிழந்தார். இவர் 59 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. இறுதியாக, ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய விராட் கோலி இரட்டை சதமடித்து வரலாற்றுச் சாதனையை டெஸ்ட் அரங்கில் படைத்தார். இவருடன் ஆடிய ஜடேஜா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 5 விக்கெட்டுக்கு 601 ரன்கள் எடுத்த இந்திய அணி முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத கோலி 254 அடித்தார். 

  india

  முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் நிலைத்து ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. 

  இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 36/3 என தடுமாறி வருகிறது.

  -vicky