இயல்பை விட்டுக் கொடுக்காதீர்கள்! நீதி கதைகள்!

  0
  46
   நீதி கதைகள்

  சின்னச் சின்ன செயலுக்குக் கூடப் புகழ்வர்.பெரும்பாலும் காரியம் சாதித்துக் கொள்ளவே இப்படிப் புகழ்வர். உங்க சட்டையோ, புடவையோ சூப்பரா இருக்குங்க. நீங்க பேசினது அற்புதம். உங்கள விட்டா வேற யாருங்க இப்படிச் செய்ய முடியும்? நீங்க மட்டும் அமெரிக்காவுல இருந்திருந்தா உங்க ரேஞ்சே வேற.. என்று நீங்கள் கீழே விழுந்து கிடக்கும் ஒரு குண்டூசியை எடுத்தால் கூட, “சார் சூப்பர் சார்..

  சின்னச் சின்ன செயலுக்குக் கூடப் புகழ்வர்.பெரும்பாலும் காரியம் சாதித்துக் கொள்ளவே இப்படிப் புகழ்வர். உங்க சட்டையோ, புடவையோ சூப்பரா இருக்குங்க. நீங்க பேசினது அற்புதம். உங்கள விட்டா வேற யாருங்க இப்படிச் செய்ய முடியும்? நீங்க மட்டும் அமெரிக்காவுல இருந்திருந்தா உங்க ரேஞ்சே வேற.. என்று நீங்கள் கீழே விழுந்து கிடக்கும் ஒரு குண்டூசியை எடுத்தால் கூட, “சார் சூப்பர் சார்.. ரொம்ப அழகா எடுத்தீங்க. கையில குதிக்காமல் எப்படி சார் எடுத்தீங்க? என்று சிலர் இதுபோல எல்லாவற்றுக்கும் ஏதாவது புகழ்ந்து காரியம் சாதித்துக் கொள்ள சுற்றிக் கொண்டே இருப்பார்கள். புகழ்ச்சி என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதுவும் எந்த பக்கமும் பிடி இல்லாத கத்தி. புகழ்ச்சி எனும் போதைக்கு மயங்காதவர்களைப் பார்ப்பது கடினம்.  
  முள்ளம் பன்றி ஒன்று காட்டில் சென்று கொண்டு இருந்தது. அதன் எதிரே ஓநாய் ஒன்று வந்து நின்றது. தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நின்றது முள்ளம் பன்றி. இதைப் பார்த்த ஓநாய், “முள்ளம் பன்றியே பயப்படாதே. நான் உன் அழகை ரசிக்கத் தான் வந்திருக்கிறேன் என்றது.

  wolf

  “என்னது? நான் அழகாக இருக்கிறேனா?”
  ஆமாம். உண்மையில் நீ அழகு தான். ஆனால், அந்த அழகை உன் உடம்புல இருக்கிற முற்கள் தான் கெடுக்கின்றன”
  எங்கள் பாதுகாப்புக்காக இயற்கையிலேயே அப்படி அமைந்து உள்ளது அந்த முற்கள். அது என் அழகைக் கெடுத்தாலும் எனக்குத் தேவை தானே
  அழகைக் கண்டு மயங்குபவர்கள் ஆயிரம் பேர். ஆனால் அவர்கள் இந்த முற்களைப் போன்ற ஆபத்தைக் கண்டு ஒதுங்கிப் போய் விடுவார்கள். எனவே உன் முற்களை மட்டும் எடுத்து விட்டால் உன் பின்னால் உன் அழகைக் கண்டு பொறாமைப்பட்டு நிறைய பேர் வருவார்கள்”
  ஓநாயின் இனிப்பு வார்த்தையில் மயங்கிப் போனது முள்ளம் பன்றி. மறுநாள் தன் முட்களை எல்லாம் மழித்து விட்டு ஓநாய் முன் வந்து நின்ற அந்த முள்ளம் பன்றி, “இப்போ நான் இன்னும் ஆழகாக இருக்கேனா?” என்று கேட்டது. 
  அழகாய் மட்டும் இல்லை, அடித்துச் சாப்பிட வசதியாகவும்,இருக்கிறாய்” என்ற படி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய். முள்ளம் பன்றி ஓநாய்க்கு இரையானது.
  ஆம்.. நண்பர்களே.. இப்படித் தான் பலரும் தங்களைப் பிறர் புகழ்கிறார்களே என்று வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டுத் தங்களை இழந்து நிற்கிறார்கள்.
  இந்த உலகில் எல்லாம்  ஒருநாள் சர்க்கரை போல் கரைந்து போகும்! உங்களுக்கு எது வசதியோ, நல்லதோ அப்படி இருந்துக் கொள்ளுங்கள். முள்ளம்பன்றியைப் போல உங்கள் இயல்பை பறிகொடுத்து விட்டு பலியாகாதீர்கள்!