இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. கட்டி வைத்து அடித்துக் கொன்ற ஊர்மக்கள் : 9 பேர் கைது !

  0
  4
  சக்திவேல்

  இவர் பெட்ரோல் பேங்க்கில் பணியாற்றி வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலைக்குச் செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலைக்குச் செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். இவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே சென்று கொண்டிருக்கும் போது இயற்கை உபாதை கழிப்பதற்காக பைக்கில் இருந்து இறங்கி மலைப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மலையின் பின்னால் ஒரு பெண் வயலில் தனியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். உபாதை கழிக்கச் சென்ற அந்த நபர், தன்னிடம் தவறாக நடந்து கொள்ளத் தான் வருகிறார் என்று எண்ணிய அந்த பெண், கூச்சலிட்டுள்ளார். 

  ttn

  இதனால், அப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பலர் அங்கு வந்து சக்திவேலைக் கட்டி வைத்து அடித்துள்ளனர். அவரிடம் எதுவும் விசாரிக்காமல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் சக்திவேலை அவர்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்த சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கத்தி ஊரை கூட்டிய அந்த பெண்ணின் கணவர் ராஜா உள்ளிட்ட 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.