இயக்குனர் மகேந்திரனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை; விரைவில் நலம்பெறுவார் யதார்த்த கலைஞன்?

  0
  1
  இயக்குநர் மகேந்திரன்

  கதாநாயக வழிபாடுகளை தகர்த்து யதார்த்த சினிமாவின் மூலம் வெகுஜன மக்களை கவர்ந்த கலைஞன். 1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன். அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான கதைசொல்லி, சிவாஜி நடிப்பில் வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தின் கதை அவர் கைவண்ணத்தில் உருவானது. 

  தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்த மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோவில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மகேந்திரன் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ் சினிமாவின் முன்னேற்றம் குறித்து பேச முடியாது. கதாநாயக வழிபாடுகளை தகர்த்து யதார்த்த சினிமாவின் மூலம் வெகுஜன மக்களை கவர்ந்த கலைஞன். 1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன்.

  மகேந்திரன் 1

  அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான கதைசொல்லி, சிவாஜி நடிப்பில் வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தின் கதை அவர் கைவண்ணத்தில் உருவானது. 

  முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய மூன்று திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்கினார். ரஜினியின் மேனரிசம் (பழக்கம் வழக்கம்) ஸ்டைலாக இருப்பதில் மகேந்திரன் பங்கும் அதிகம். ரஜினி, பாலுமகேந்திரா மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு திரை ஆளுமைகளின் மனம் கவர்ந்த கலைஞன் மகேந்திரன்.

  மகேந்திரன் 2

  10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படம் இயக்குவதில் இருந்து விலகியிருந்த மகேந்திரன், ‘தெறி’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார்.

  அதன்பிறகு உதயநிதியின் ‘நிமிர்’, ரஜினியின் ‘பேட்ட’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மகேந்திரன் கடந்த சில தினங்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார்.

  தெறி

  உடல் நலிவுற்ற நிலையில் அவரை நேற்று மதியம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து  டயாலிசிஸ் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அவரை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  அப்பா உடல்நிலை நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  இதையும் படிங்க 

  பாஜக – வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் – டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்