இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு சிலை… குருவிற்கு மரியாதை செய்த சிஷ்யர்கள்!

  7
  ரஜினி -கமல்

  அதன்படி  இரண்டாவது நாளான இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. 

  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது  65-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதே சமயம் கமல் திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு  3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

  kamal

  அதன்படி  இரண்டாவது நாளான இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. 

  kamal

  அத்துடன், ரஜினி -கமல் இருவரின்  குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை சிஷ்யர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.

  rajini

  இந்த நிகழ்வில் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.