இயக்குநர் சேரன் அழைப்பை ஏற்று காதலியுடன் சென்ற தர்ஷன்

  0
  9
   தர்ஷன் - சனம் ஷெட்டி

  பிக் பாஸ் பிரபலமான தர்ஷன் மற்றும் அவரது காதலி சனம் ஷெட்டி கலந்துகொண்டனர்.  

  சென்னை  : நடிகரும் இயக்குநருமான  சேரனின் ‘ராஜாவுக்கு செக் படத்தின் ஸ்பெஷல் ஷோவில் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்டுள்ளார். 

  cheran

  இயக்குநர் சேரன் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார். இதில்  இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில்  நடைபெற்றது.

  sanam

  இதையடுத்து படத்தின் ஸ்பெஷல் ஷோவும் திரையிடப்பட்டது. அதில் பிக் பாஸ் பிரபலமான தர்ஷன் மற்றும் அவரது காதலி சனம் ஷெட்டி கலந்துகொண்டனர்.  

  sanam

  இந்நிலையில் இதுகுறித்து புகைப்படத்தை தர்ஷனும், சனம் ஷெட்டியும் தங்கள்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள சேரன் நீங்கள் வந்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.