‘இமைக்கா நொடிகள்’ இயக்குநர் படத்தில் சீயான் விக்ரம்!

  0
  3
  chiyaanvikram

  சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  சென்னை: சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற ஹாரர் திரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்தப்படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ‘கடாரம் கொண்டான்’ என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

  kadaramkondan

  இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  அஜய் ஞானமுத்துவின் ‘டிமாண்டி காலனி’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சீயான் விக்ரமுடன் அஜய் ஞானமுத்து இணையும் படத்திற்கும் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.