இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் – 11 நாட்களில் இது எட்டாவது நிலநடுக்கம்

  0
  1
  Himachal Pradesh

  சம்பாவிலிருந்து வடகிழக்கில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.

  சிம்லா: சம்பாவிலிருந்து வடகிழக்கில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.

  இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் உயிர்சேதம் அல்லது சொத்து இழப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  chamba

  காலை 7.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குநர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இது சம்பா மாவட்டத்தில் 11 நாட்களில் எட்டாவது நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி சம்பாவிலிருந்து வடகிழக்கில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக பக்கத்து பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது என்று சிங் கூறினார்.

  முன்னதாக, மார்ச் 27 முதல் 30 வரை இந்த மாவட்டத்தில் 3 முதல் 4.5 ரிக்டர் வரை ஏழு நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. சம்பா உட்பட இமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் உயர் நில அதிர்வு உணர்திறன் மண்டலத்தில் உள்ளன.