“இப்பல்லாம் சீட்டுக்கட்டில்தான்  உள்ளே வெளியே விளையாடுறோம்”-  ஊரடங்கால் அடங்கிபோன  பாலியல் தொழிலாளிகள்.. 

  0
  1
  Rep image

  காமதிபுரா ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய விபச்சார விடுதி என்று அழைக்கப்பட்டது. பல்வேறு வயதுடைய பெண்கள் இங்கு விபச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளனர். பலர் மேற்கு வங்கம், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறார்கள்.தற்போதைய ஊரடங்கின்  காரணமாக, இங்குள்ள விபச்சார தொழில்  மந்த நிலையில் உள்ளது.

  ஒரு சாதாரண நாளில் இப்பகுதி பரபரப்பாக இருக்கும். நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள் . ஆனால், இப்போதெல்லாம் காமதிபுராவின் குறுகிய பாதைகள்,  பழைய பாழடைந்த கட்டிடங்கள் வெறிச்சோடிய நிலையில் உள்ளன.

  red-light-area-89.jpg

  இப்போது எந்த வேலையும் இல்லாத நிலையில், சில விபச்சாரிகள் குழுக்களாக உட்கார்ந்து, ஒருவருக்கொருவர் நரை முடியைப் பறிப்பது அல்லது சீட்டுக்கட்டு விளையாடுவது போன்றவற்றைக் காணலாம்.
  இந்த ஊரடங்கு காலங்களில் தனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பணம் சம்பாதிப்பது எப்படி என்று  30 வயது பாலியல் தொழிலாளி ஜெயா கவலைப்படுகிறார். மேற்கு பங்களாதேஷை  சேர்ந்த இவர் , ஒரு கடத்தல்காரனால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டார்.

  redlight-area

  “இப்போது ஒரு வாரமாக  எனக்கு எந்த வேலையும் இல்லை, என்னிடமும் போதுமான பணம் இல்லை” என்று ஜெயா கூறுகிறார், அவருக்கு ஆறு வயது மகன் உள்ளார், புனேவில் தன்னுடைய உறவினர் வீட்டில் அவர் தங்கி படிக்கிறார். “ஒவ்வொரு மாதமும், என் குழந்தைக்கு குறைந்தபட்சம் ரூ .1,500 அனுப்ப வேண்டும், ஆனால் நான் சம்பாதிக்கவில்லை என்றால், அவருக்கு  நான் எப்படி பணத்தை அனுப்ப முடியும்? எனக்கு கவலையாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.மற்றொரு பாலியல் தொழிலாளி கிரண்,,” இந்த நிலைமை தொடர்ந்தால், திருட்டு, கொள்ளை மற்றும் கொலை  போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்,