இப்படியெல்லாம் கூடவா காதலை ப்ரப்போஸ் பண்ணுவாங்க..! நெகிழ வைக்கும் 2k கிட்ஸ்..!

  0
  3
  காதல்

  ‘நைன்டிஸ் கிட்ஸ்தான் காதலை சொல்ல கூச்சப்படுவாங்க..2k  கிட்ஸ் எல்லாம் அப்படிக் கிடையாது…’ என்று சோஷியல் மீடியாக்களில் செய்தி பார்த்திருப்பீர்கள்.அப்படியொரு 2k  கிட்ஸ்,தன்காதலியிடம்  காதலை வெளிப்படுத்திய விதம்தான் இப்போது உலகம் முழுக்க வைரல்! அப்படி என்ன பண்ணினார் என்று கேட்குறீங்களா!?

  man

    

  இந்த இளைஞன் பெயர் மைக் ஆக்டன்(Mike Odgen) தான் காதலிக்கும் ‘கைனோர் மார்ஷல்’லிடம் (Gaydon Marshall) யிடம் யாரும் சொல்லாத விதத்தில் புதுசா ப்ரப்போஸ் பண்ண நினைத்திருக்கிறார்.அதற்காக ஊரே கூடி நிற்கும் பரபரப்பான ரோடு ஒன்றில் தனது காரைக் கொண்டு நிறுத்தி,வாகனத்தின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ‘மைக் ‘ஸ்டோன் ரோஸ் சோங் சாலி சின்னமோன்’என்ற பாடலைப் பாடியபடியே ஒரு டான்ஸையும் போட்டு தன் காதலை தெரிவித்து மணமிக்க சம்மதம் கேட்டார்.பையன் நல்ல வெவரமான ஆளாத்தான் இருப்பார் போல வீட்டுல இருந்து கிளம்பும் போதே காரோக்கி பாக்ஸையும் கையோடு கொண்டு வந்து செம கச்சேரி பண்ணியிருக்கிறார்.

  love

  ஆட்டத்தின் இறுதியாக காரின் கூரையை விட்டு கீழே இறங்கி வந்து காதலியின் காலடியில் மண்டியிட்டு,கையில் பூச்செண்டினை ஏந்தியவாறு,’நீதான் என் உலகம், நீ என் மனைவியானால் இந்த உலகிலே என்னை மிகவும் மகிழ்ச்சிமிக்க மனிதனாக்க உன்னால் மாற்ற முடியும்,நீ என்னை மணக்க சம்மதிப்பாயா?’ என்று உருக்கமாகச் சொல்லி காதலியின் முகத்தைப் பார்க்கிறார்.பதிலுக்கு அவர் காதலி மார்ஷல் கண்ணீருடன் ‘நான் சம்மதிப்பேன் என்று உனக்கு தெரியும்’ என்றார்.

  propose

  மைக் இவ்வாறு வாகனத்தின் மீது ஏறியிருப்பதை கண்ட மார்ஷலின் உடன் பணிபுரியும் நண்பர்கள் மார்ஷலை வெளியில் அழைத்து காண்பித்தனர். ஆனால் அவர்களுக்கு முன்கூட்டியே மைக்கின் திட்டம் என்னவென்று தெரியும். மார்ஷல் மைக்கை பார்த்து,’இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது’ என்று கூறினார்.

  மைக்கிடம் இதுபற்றி கேட்டபோது, ‘தான் ஒரு அழகிய நினைவுடைய காதல் வெளிப்பாடு செய்ய எண்ணினேன், அது எப்போதும் எங்களுக்கிடையில் பேசப்படும் ஒன்றாக இருக்கவேண்டும்,  மேலும் திருமணம் என்றால் எப்போதும் இருவர் மட்டும் ஏதோ ஒரு கடற்கரையில் அமர்ந்து பேசப்படும் சாதாரன நிகழ்வாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

  இதைப் பார்த்த பொது மக்கள் கைதட்டி வரவேற்றிருக்கிறார்கள்.சில நெட்டிசன்கள் கிறுக்குத்தனத்தின் உச்சம் என்றும் கமெண்ட்டை தட்டுகிறார்கள்.காதல் என்றாலே கிறுக்குதானே மக்கா..