இன்றைய சோஷியல் மீடியா டாக்கே…. 5 பைசா பிரியாணி தான்..! 

  0
  9
  பிரியாணி

  அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு தொப்பி வாப்பா பிரியாணிக் கடையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள் என்ற விளம்பரம் வாட்ஸ் அப்பில் வைரலாகிவருகிறது. 

  அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு தொப்பி வாப்பா பிரியாணிக் கடையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள் என்ற விளம்பரம் வாட்ஸ் அப்பில் வைரலாகிவருகிறது. 

  5 பைசா நாணயம் தான் செல்லாதே.. அதற்கு எப்படி பிரியாணி கொடுக்கும் முடியும்.. இதனால் பிரியாணி கடைக்காரருக்கு என்ன லாபம் என நாம் நினைக்கலாம். ஆனால் லாபத்திற்காக இந்த விளம்பரத்தை செய்யவில்லை என்கிறார் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் ஓனர்… பிறகு எதுக்குப்பா இந்த விளம்பரம் என கேட்கிறீர்களா? உணவு தினத்தை முன்னிட்டு பலருக்கு உணவளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு நோக்கம். ஆனால் இலவசமாக உணவு வாங்கி உண்பதை பலர் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதற்கு யாசகம் என்ற பெயரும் கிடைக்கும். அதனால் புதுசாக ஒரு விஷயம் செய்ய யோசித்தோம்… அந்த புது ஐடியாதான் இந்த 5 பைசா பிரியாணி எனக்கூறுகிறார் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் உரிமையாளர் உமர்.

  briyani

  இதன்மூலம் பழைய 5 பைசா நாணயத்தை தேடும் வாய்ப்பு ஒவ்வொரு இளைஞருக்கும் கிடைக்கும். மேலும் இதுபோன்று யாருமே இதுவரை செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த புது ஐடியா குறித்து பலருடைய இல்லத்திலும் உரையாடல் நடக்கும் இதுவே எங்களின் சாதனை என்றும் உமர் தெரிவிக்கிறார். ஆக இதனை பிசினஸ் ட்ரிக் என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது கடைக்கு இலவச விளம்பரம்..!