இன்றைக்கு பிறந்த நாள் விஜய்க்கு தான் ஆனால் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த அஜித்! உலகளவில் ட்ரெண்டான #என்றும்_தல அஜித் ஹாஸ் டாக்! 

  0
  7
  விஜய்- அஜித்

  #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங்கில் முதல் இடத்திலிருந்தது நிலையில் அஜித் ரசிகர்கள் #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.

  சென்னை: #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங்கில் முதல் இடத்திலிருந்தது நிலையில் அஜித் ரசிகர்கள் #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.

  தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர் நடிப்பின் மூலம் மற்றும் இல்லாமல் தனது அன்பான குணம் மூலமும் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் இவருக்கு தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

  vijay

  இவரின் பிறந்த நாளை  கொண்டாடும் விதமாகப் பல முன்னணி தியேட்டர்களில் தெறி, போக்கிரி, துப்பாக்கி ஆகிய மெகா ஹிட் திரைப்படங்களைத் திரையிடுகின்றன. மேலும் தளபதி 63 என்று அழைக்கப்பட்ட பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்  போஸ்டர்கள் வெளியானது. 

  vijay

  இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளான இன்றும் அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில்  #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. ஆனால் திடீரென்று எங்கிருந்து அஜித் ரசிகர்கள் வந்தார்கள் என்று தெரியவில்லை. #என்றும் _தலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். தற்போது இந்த ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி  #என்றும்_தல அஜித் என்ற ஹேஷ் டேக் தேசிய அளவில் முதலிடத்திலும், #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக் இரண்டாவது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. இதனால் மீண்டும் இவரது ரசிகர்கள் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளனர்.