இன்று முதல்வர் ஆலோசனை: கொரோனாவுக்கு எதிராக அடுத்த நடவடிக்கை என்ன?1

  0
  1
  CM

  ஊரடங்கு இருப்பினும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது.

  கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

  TTN

   

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு இருப்பினும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டதன் படி, இன்று காலை 11 மணிக்கு அந்த குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். அந்த கூட்டத்தில் கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.