இன்று நள்ளிரவு இரண்டாக உடையும் ஜம்மு, காஷ்மீர்! 

  0
  4
  Jammu kashmir

  சர்தார் வல்லபாய் பிறந்தநாளையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி முதல் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் மாற உள்ளது.

  சுமார் 70 ஆண்டு கால காஷ்மீர் விவகாரத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகைளை நீக்கியது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மூன்றும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாறவுள்ளன. சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்தநாளான இன்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றன. சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்கிறார். சட்டசபை அல்லாத லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்துர் பொறுப்பேற்கிறார்.

  ஜம்மு

  ஜம்மு, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 மீதான விவாதத்தின் போது, நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரை சம்பந்தப்படுத்தி பா.ஜ.வும், காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள்  ஆக்ரோஷமாக வார்த்தை போரில்  ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.