இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தினம்…நமது கெளரவ விருந்தினர் பத்தி தெரிஞ்சா பயந்துடுவீங்க!

  0
  2
  brazil president

  இன்று நடைபெற இருக்கும் இந்தியாவின் 71வது குடியரசு தினத்தின் தலைமை விருந்தினர் பிரேசிலின் அதிபர் ஜேர் மெஸ்ஸியா போல்சாநோரா.
  போர்த்துக்கீச பிரேசிலிய கலப்பிணத்தவரான போல்சாநோரா 2019 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தப் பதவியில் இருக்கிறார்.

  இன்று நடைபெற இருக்கும் இந்தியாவின் 71வது குடியரசு தினத்தின் தலைமை விருந்தினர் பிரேசிலின் அதிபர் ஜேர் மெஸ்ஸியா போல்சாநோரா.
  போர்த்துக்கீச பிரேசிலிய கலப்பிணத்தவரான போல்சாநோரா 2019 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தப் பதவியில் இருக்கிறார்.

  brazil

  இவர் சமூக ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் உளருவதில் நமது ஊர் அரசியல் வாதிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவரில்லை.இன்னும் சொல்லப்போனால் இவரது சில கருத்துகள் நம்மவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
  அத்துடன், இவரை சரியாகப் புரிந்து கொள்ள பிரேசில் வரலாறு குறித்த ஒரு சிறிய அறிமுகம்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இப்போது வாழும்,ஆளும் மனிதர்கள் அனைவருமே வந்தேரி ஐரோப்பியர்கள்தான்.அதாவது இப்போதும் நம்மை பிரிட்டனே ஆண்டு ஒரு ஆங்கிலேயர் இந்தியாவின் பிரதமராக இருப்பது போல.அப்படி பதவியில் இருக்கும் போல்சனோராவின் சில ‘ பொன்மொழிகளை’ கேளுங்கள்.

  brazil

  கடந்த வியாழக்கிழமை அவர் தனது ஃபேஸ்புக் அக்கவுண்டில் சொன்ன கருத்து இது,
  ‘ இந்த உள்ளூர் இந்தியர்கள்,சந்தேகத்துக்கு இடமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். நம்மைப் போலவே’!.

  பிரேசிலுக்கு சர்வாதிகார ஆட்சிதான் சரியானது என்று கருதுகிறார். போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது வழக்கம்தான்.
  ஓட்டுப்போட்டு நீங்கள் எதையும் மாற்ற முடியாது.அப்படி மாற்ற வேண்டுமானால் , போதுமானவர்கள் கொள்ளப்படவில்லை என்றால் பிரேசிலில் இன்னும் உள்நாட்டு போர்கள் நடக்க வேண்டும்.

  brazil

  3) அமெரிக்க படைகளைப்போல் உள்ளூர் செவ்விந்தியர்களை பிரேசில் ராணுவத்தால் அழிக்க முடியாதது வெட்கக்கேடு.

  ரொசியோ என்கிற பெண் எம்பி பிரேசிலில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிப் பேசியபோது போல்சநாரோ ‘ உங்களைப்போல் அசிங்கமான பெண்ணை வன்புணர்வு செயவது தேவையில்லாதது’ என்றார்.

  brazil

  என்மகன் ஒரு தன்பாலின ஆளாக இருந்தால் அவன் ஒரு விபத்தில் சாவதையே நான் விரும்புவேன்.
  2018ல் நான் பேச்சிலர் அப்போது ஹவுசிங் அலவன்ஸுக்காக எனக்குக் கொடுத்த பணத்தை எல்லாம் நான் பாலியல் தொழிலாளர்களுக்குத்தான் செலவழித்தேன்.
  2016ல் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் போல்சனாரோ சொன்னார்,ஆண்களுக்குத் தரும் அதே ஊதியத்தில் ஒரு பெண்ணை நான் பணியிலமர்த்த மாட்டேன்.