இன்னைக்கு யாரோ புதுசா பிக் பாஸ் வீட்டுக்குள்ள வராங்க பா…! 

  0
  1
  பிக்பாஸ்

  பிக் பாஸ் வீட்டில் இன்றைக்கு யாரோ ஒருவர் எண்ட்ரி கொடுப்பது போல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் இன்றைக்கு யாரோ ஒருவர் எண்ட்ரி கொடுப்பது போல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது முதல் நாளிலிருந்து 100வது நாள் வரை பரபரப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் இந்த முறை கவனமாகச் செயல்பட்டு அதற்கு ஏற்றார் போல் புரமோவை வெளியிட்டு வருகின்றனர்.

  அந்த வகையில் இன்றைக்கான புரோமோக்கள் வெளியானது. அதில் இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் சண்டை, அழுகை எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் கூறும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

  அதில் சாண்டி மாஸ்டர் இந்த வாரம் முதல் பிக் பாஸ் வீட்டில் யுத்தம் தொடங்கவுள்ளதாகவும், அதில் தானும் பங்குகொள்வேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டின் கதவு தரிக்கப்படுவது போல் உள்ளது. ஆதலால் இன்றைய நிகழ்ச்சியில் யாரோ ஒருத்தர் கலந்து கொள்ளப்போகிறார்கள் போல… அவர் யார் என்பதை நாம் இன்றைக்கு இரவு வரை காத்திருந்து தான் பார்க்கா வேண்டும்.