இன்னும் 6 மாதங்களில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பார்: கராத்தே தியாகராஜன் உறுதி!

  0
  1
  கராத்தே தியாகராஜன்

  ரஜினி ஆறு மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

  ரஜினி ஆறு மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

  கடந்த 2017ம் ஆண்டு அரசியல்  வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக  மக்களவை தேர்தலில் அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான தலைவருமான கமல் ஹாசன் களம்கண்ட நிலையிலும், தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்றார். அவ்வப்போது ரஜினி சில சர்ச்சை கருத்துக்கள் அவர் மீது  பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையைப் பதித்துள்ளது. 

  rajini

  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்றும்  2021-ல் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினி முதல்வர் ஆவார் எனவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

  karate

  காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்த நிலையிலும், ரஜினியின் தீவிர ரசிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கராத்தே தியாகராஜன் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகிறார். சமீபத்தில் திமுகவை விமர்சித்துப் பேசியதால் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனிடையே கட்சியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக இவர் ரஜினியுடன் கைகோர்ப்பார் என்றும் தகவல் வெளியாகின்றன.