இன்னும் என்னென்ன சீக்ரெட்ஸ் ரிலீசாகப்போகுதோ… பாஜக அரசால் பதறும் எடப்பாடி..!

  14
  எடப்பாடி பழனிசாமி

  ஓய்வுபெற்ற சர்வ அதிகாரம் கொண்ட பெண் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதனும் ஆளும்கட்சியின் விவிஐபிக்களும் பல விஷயங்களை மறைத்து விட்ட விவகாரத்தில் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

  ஓய்வுபெற்ற சர்வ அதிகாரம் கொண்ட பெண் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதனும்  ஆளும்கட்சியின் விவிஐபிக்களும் பல விஷயங்களை மறைத்து விட்ட விவகாரத்தில் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. girija

  நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது பற்றி அப்போது கிரிஜா வைத்தியநாதனுக்கும் அதிமுக விவிஐபிக்களில் சிலருக்கும் நன்றாகவே தெரியும்.  ஒரு மசோதாவை அரசு நிராகரிக்கிறது என்றால் அதற்கான காரணத்தை சொல்லி திருப்பி அனுப்பும். ஆனால் இப்படி ஒரு மசோதா பைல் திரும்பி வரவே இல்லை என்று அதிமுக தரப்பு சொல்வது நம்பும்படி இல்லை என்று ஏற்கனவே ஓய்வுபெற்ற சீனியர் அதிகாரிகள் மத்தியில் பேச்சு வந்தது.girija

  அது தற்போது உண்மையாகி இருக்கிறது. இன்னும் எத்தனை மசோதாக்கள் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி மத்திய அரசால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது ரகசியமாகவே இருக்கிறது. இதில் மேகதாது விவகாரமும் இருக்கலாம். ஹைட்ரோ கார்பனும் இருக்கலாம். மீத்தேனும் இருக்கலாம். எழுவர் விடுதலையும் இருக்கலாம். முல்லை பெரியாரும் இருக்கலாம். வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிரகாரிக்கப்பட்டு அந்த பைல் மாநிலத்துக்கு திரும்பி வந்து இருக்கலாம்.modi

  இவை அனைத்தும் ரகசியமாக தமிழகத்தின் தலைமை செயலக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம். இவை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வழியில் வெளியாகலாம். இப்படிதான் தலைமை செயலகத்தில் உள்ள ஊழியர்கள் மட்டத்தில்  பேச்சுக்கள் எழுந்துள்ளது.