இன்னும் எத்தனை குடியை கெடுக்கப்போகுதோ இந்த டிக் டாக்!

  0
  1
  TikTok

  எவ்வளவோ டெக்னாலஜி புதுமைகள் வந்துவிட்டாலும், இந்த காதலுக்கு கண் தெரியாத பிரச்னையை மட்டும் தீர்க்க முடியவில்லை. புஷ்பராஜை சங்கீதா தொடர்ந்து வலியுறுத்த, தனது பெற்றோரிடம் பேசியிருக்கிறார் புஷ்பராஜ். நல்ல காதலுக்கே குறுக்கே வரும் பெற்றோர், இந்த நொள்ளக்காதலுக்கா சம்மதம் தெரிவிப்பர்?

  நெல்லை பாளையங்கோட்டை இலந்தை குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மரிய புஷ்பராஜும், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சங்கீதாவும் டிக் டாக் நண்பர்கள். ஒருவருக்கு ஒருவர் இடும் லைக் வீடியோவைத் தாண்டியும் சென்றிருக்கிறது. வீடியோ மிக்ஸிங்கும் நடந்திருக்கிறது. மிக்ஸிங் வீடீயோவோடு நின்றுவிடக்கூடாது என்ற தனது ஆசையை சங்கீதா, புஷ்பராஜிடம் சொல்லியிருக்கிறார். இருபத்தியிரண்டே வயதான புஷ்பராஜுக்கும் ஓகேதான். ஒரே ஒரு வில்லங்கம்தான். சங்கீதாவுக்கு இளம் வயதிலேயே லாரி டிரைவர் ஒருவருடன் திருமணமாகி, குழந்தையாகி, பிரச்னையாகி, கருத்து வேறுபாடாகி, குழந்தையுடன் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

  Sangeetha - Pushparaj

  எவ்வளவோ டெக்னாலஜி புதுமைகள் வந்துவிட்டாலும், இந்த காதலுக்கு கண் தெரியாத பிரச்னையை மட்டும் தீர்க்க முடியவில்லை. புஷ்பராஜை சங்கீதா தொடர்ந்து வலியுறுத்த, தனது பெற்றோரிடம் பேசியிருக்கிறார் புஷ்பராஜ். நல்ல காதலுக்கே குறுக்கே வரும் பெற்றோர், இந்த நொள்ளக்காதலுக்கா சம்மதம் தெரிவிப்பர்? அவர்கள் புஷ்பராஜை கண்டிக்கவும், மனம் உடைந்த திராவகம் குடித்து மயங்கி சரிந்திருக்கிறார். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட புஷ்பராஜைக் காண சங்கீதா ஓடோடி வந்திருக்கிறார். புஷ்பராஜ் உறவினர்கள் சங்கீதாவை விரட்டியடிக்க, வேறு வழியில்லாமல் அவரும் விஷம் அருந்திவிட்டார். ஒரே ஆஸ்பத்திரியில் வேண்டாம் என்பதால், சங்கீதாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.