இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே, மூன்று ரியர் கேமராக்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்

  0
  3
  samsung

  சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ (2019) ஸ்மார்ட்போன் தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  சியோல்: சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ (2019) ஸ்மார்ட்போன் தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  தென்கொரியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே, மூன்று ரியர் கேமராக்கள், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைனை வைத்து பார்க்கையில், கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் போன்று உள்ளது. மேலும், 3400 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ரியல் விரல்ரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

  கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் 24 எம்.பி + 10 எம்.பி + 5 எம்.பி ஆகிய மூன்று ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதேபோல 24 எம்.பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6.4 டிஸ்பிளே ஆகிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. ப்ளூ, பிளாக், அப்சொலியூட் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை தென்கொரியா மதிப்பில் 5,99,500 வோன் (இந்திய மதிப்பில் ரூ.37,800) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் பிப்ரவரி 28-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது. கூடிய விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.