இனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது… குவியும் பாராட்டுக்கள்!

  0
  1
  ஹெல்மெட்

  ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் சாமான்ய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதுமே பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. லட்சக்கணக்கில் அபராதத் தொகைகளை செலுத்திய லாரி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டநர்கள் எல்லாம் தொலைக்காட்சிகளின் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர்.

  ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் சாமான்ய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதுமே பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. லட்சக்கணக்கில் அபராதத் தொகைகளை செலுத்திய லாரி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டநர்கள் எல்லாம் தொலைக்காட்சிகளின் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர்.  நாட்டின் சில பகுதிகளில் இந்த அபராத விதிப்பினால் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் பொதுமக்களிடம் சபாஷ் வாங்கியிருக்கிறது ஆந்திர போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.

  helmet

  வாகனங்களில் வருபவர்கள் என்ன விதமான சட்ட மீறலில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்துக் கொண்டு, அபராதங்களுக்குப் பதிலாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வழிகாட்டுகிறார்கள் போலீசார். ஆந்திர போலீசாரின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து, பாராட்டுக்களும்  குவிந்து வருகிறது.
  ஹெல்மெட் இல்லையென்றால், அபராதம் எதுவும் விதிக்காமல், அதே இடத்தில் புதிதாய் ஹெல்மெட் தருகிறார்கள். வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாமல் வருவோருக்கு, அதே இடத்தில் வாகனத்தின் ஆவணங்களைப் பெற்றுத் தருவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாடு மற்றும் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுத் தர வசதிகளையும் ஆந்திர போலீஸ் செய்து தந்து புதிய முறையை கையாண்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு ஆன்லைனின் புக்கிங் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிற மாநிலங்களுக்கு இந்த செயல் முன்மாதிரியாகவும், விதிமீறல்களை நிறுத்துவதற்கு அபராதங்கள் என்றுமே உதவாது, இத்தகைய நடவடிக்கைகளே உதவும் எனவும் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் திவ்யா சரண் ராவ்.