இனி, ஸ்மார்ட் டிவியை பாய் செய்தித்தாள் போன்று சுருட்டி வைத்துக் கொள்ளலாம்…எல்.ஜி நிறுவனம் அசத்தல்!

  0
  3
  LG

  சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான ஸ்மார்ட் டிவி மாடல்களை எல்.ஜி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

  மும்பை: சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான ஸ்மார்ட் டிவி மாடல்களை எல்.ஜி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

  எல்.ஜி நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அடுத்தாண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய டிவிக்கள் செய்தித்தாள் போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்த டி.வி.யில் OLED டிஸ்பிளே பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும். சீயோல் நகரில் உள்ள எல்.ஜி ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.