இனி ஸ்பீக்கரை தூக்கவேண்டாம்! தள்ளிட்டே போகலாம்! ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு உற்ற நண்பன்! 

  0
  1
  மாதிரி படம்

  உங்கள் வீக் எண்ட் பார்ட்டியை உற்சாகமாக கொண்டாட வசதியாக மார்க்கெட்டில் புதிதாக ஒரு டிராலி ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது ஜியோக்ஸ் நிறுவனம்! ஏற்கனவே டிவியை அறிமுகப்படுத்தி ஹிட்டடித்திருப்பதால் இதுக்கும் செம ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று நம்புகிறது அந்த நிறுவனம்.

  group

  ‘ஜியோகிஸ் ஸ்பீக்கர்’அட்டகாசமான வடிவமைப்புடன் வந்திருக்கிறது.தவிர, டிராலி   மாதிரி இதை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக்கொண்டு போகலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.கரடு முரடான ரோடு,மலை பிரதேசங்கள் எங்கு வேணாலும் ஹாயாக இழுத்துக்கொண்டு போகலாம்.இந்த ஸ்பீக்கருடன் ஸ்மார்ட் போன்கள்,டேப்லெட்டுகள், ப்ளூ டூத் கனெக்ட் பண்ணி பாட்டு கேட்க முடியும். தவிர AUX இன்புட் கேபிள் வசதியும் இருக்கிறது.இதில் உங்களுக்கு பிடித்தமான FM ல் பாடல்களையும் கேட்க முடியும்.

  speaker

  இது எல்லாத்தையும் விட  2000mAh இன்பில்ட் பாட்டரி தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் பாடல்களைக் கேட்க முடியும்.இதில் பொருத்தப்பட்டுள்ள RGB விளக்குகள்  பாடலின் தனமைக்கு ஏற்ப ஒளிரும் என்பதால் நீங்கள் இருக்கும் இடத்திலேயே கொண்டாட்டமாக ஆட்டம் போட வைக்கும். 3 வே  சவுண்ட் டிசைன்கள், பவர்ஃபுல் பாஸ் உடன் 8” ஊஃபர் மற்றும் 120W RMS பவர் கொண்டு, 10மீ வரை உபயோகப்படுத்தக்கூடிய வியர்லஸ் மைக் உள்ளதால் உங்கள் கரோக்கே மற்றும் பார்ட்டி மூடுகளை ஜியோக்ஸ் ஸ்பீக்கருடன் கொண்டாடுங்கள்!

  party

  இந்த ஸ்பீக்கர், மானுவல் கண்ட்ரோல் மட்டுமன்றி ரிமோட் வைத்தும் கட்டுப்படுத்த முடியும்.பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ஜியோக்ஸ் ஸ்பீக்கர் கடைகளிலும், ஆன்லைனிலும் விற்கப்படுகிறது, இதன் விலை இந்தியாவில் ரூ.4,999 மட்டுமே!