இனி வாட்ஸ்-அப் கைரேகை வெச்சா தான் திறக்கும்! 

  0
  15
  வாட்ஸ்-அப்

  தகவல் பரிமாற்றத்திற்கு தொலைபேசி அழைப்புகளை விட அதிகளவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக, இனி பயன்படுத்துபவரின் கைரேகை இருந்தால் தான் வாட்ஸ்-அப் செயலியைத் திறக்க முடியுமாறு புதிதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பெறலாம்.

  தகவல் பரிமாற்றத்திற்கு தொலைபேசி அழைப்புகளை விட அதிகளவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக, இனி பயன்படுத்துபவரின் கைரேகை இருந்தால் தான் வாட்ஸ்-அப் செயலியைத் திறக்க முடியுமாறு புதிதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பெறலாம். இதுநாள் வரையில் இந்த வசதி ஐஓஎஸ் செல்போன்களில் மட்டுமே இருந்து வந்தது. பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  whatsapp

  உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தே அதில் பல்வேறு வசதிகளையும், புதுமைகளையும் பயன்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பயன்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறுவதற்கு அவர்கள் வாட்ஸ் அப்பின் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தால் போதும். உங்கள் செல்போனில் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த வசதியைப் பெறலாம்.

  whatsapp

  வாட்ஸ் அப் செயலியைத் திறந்து, அதில் செட்டிங்க்ஸ் பகுதிக்குச் சென்றால் அக்கவுன்ட் பகுதி வரும். அதைக் க்ளிக் செய்து அதில் ப்ரவைசி என்பதை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத் தேர்வு செய்தாலே போதும். அதன் பிறகு உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத் தவிர வேறு யாரும் திறக்க முடியாது.