இனி மோடியை பாதுகாக்க மட்டும்தான் சிறப்பு பாதுகாப்பு குழு வீரர்கள்

  0
  4
  எஸ்.பி.ஜி. பாதுகாப்பில் பிரதமர் மோடி

  சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கி வந்த எஸ்.பி.ஜி. (சிறப்பு பாதுகாப்பு குழு) பாதுகாப்பை மத்திய அரசு பெற முடிவு செய்துள்ளதால், அந்த அமைப்பில் உள்ள வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பிரதமர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) ஏற்படுத்தப்பட்டது. 1991ல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும். 

  பிரியங்கா, ராகுல், சோனியா

  2003ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. தானாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய 10 ஆண்டுகள் காலத்தை, அச்சுறுத்தலின் அளவை பொறுத்து மாற்றலாம் என கொண்டு வரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் முன்னாள் பிரதமர்கள் எச்.டி. தேவகவுடா, வி.பி.சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

  ராகுல் காந்தி

  இந்நிலையில், 1991 முதல் சோனியா மற்றும் அவரது வாரிசுகள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் தினமும் எஸ்.பி.வி. பாதுகாப்பு விதிகளை மீறியது மற்றும் எஸ்.பி.ஜி.யின் சீரான நடைமுறைக்கு தடையாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து அரசு இந்த முடிவு எடுத்ததாக தகவல். அதேசமயம் அவர்களுக்கு இனி இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இனி எஸ்.பி.ஜி. பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பில் பணியில் ஈடுபடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.