இனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் ! முன்னணி சேனல்களுடன் ஒப்பந்தம் !

  0
  7
  facebook

  செய்திகளுக்கு என்று இலவச பிரத்யேக பிரிவு ஒன்றை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  செய்திகளுக்கு என்று இலவச பிரத்யேக பிரிவு ஒன்றை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சியை பார்த்து செய்திகள் தெரிந்து கொள்வது போய் தற்போது மொபைல் போனிலேயே செய்தி தெரிந்து கொள்ளும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு காரணம் ஒரு செய்தி சமூக வலைதளங்கள் மூலம் ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக செய்து சென்றுவிடுவதுதான்.  

  facebook

  தற்போது பலர் செய்திகளை சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்கின்றனர். நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு புதிய செய்தி பிரிவை தொடங்குகிறது பேஸ்புக் நிறுவனம். இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான வால் ஸ்டீரிட், ஜோர்ணல், நியூஸ் கார்ப், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக்.