இனி சென்னையிலேயே மொட்டைப் போடலாம்! திருப்பதி தேவஸ்தானம் சார்ப்பில் புதிய கோவில்!

  0
  12
  Thirupathi devasthanam

  திருப்பதி தேவஸ்தானத்திற்கான 30 பேர் கொண்ட ஆலசோனைக் குழு தி.நகர் பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. 

  சென்னை தி.நகரில் பிரசித்தி பெட்ரா பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதியில் இருக்கும் பெருமாளைப் போலவே, இங்கும் பெருமாள் அதே உருவத்தில் காட்சியளிப்பதால் இந்த கோவிலில் கூட்டம் களைக்கட்டுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தரிசனத்துக்கு இங்கே டிக்கெட் புக் செய்து தரப்படுகிறது. மக்களின் கூட்டம் இங்கு அதிகரித்துக் காணப்படுவதால் திருப்பதி தேவஸ்தானத்திற்கான 30 பேர் கொண்ட ஆலசோனைக் குழு தி.நகர் பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. 

  perumal

  அந்த குழு இன்று திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் தி.நகர்  பெருமாள் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, “திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கத் தமிழ்நாட்டிலிருந்தே கூட்டம் அதிகமாக வருகிறது. தமிழ் மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகத் தனி ஆலோசகர் குழு செயல்பட்டு வருகிறது.

  Segar reddy

  லட்டு விலையிலும் சாமானிய மக்கள் தங்கும் விடுதியின் கட்டணத்திலும் தற்போதைக்கு எந்த வித மாற்றமும் இல்லை. சென்னையில் பெருமாள் கோவில் கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடம் கேட்டிருந்தோம். அதன் படி, முதலைச்சர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இட ஒதுக்கீடு செய்துள்ளார். ஆகம சாஸ்திர விதிகளுக்கு ஏற்றவாறு ஆராய்ந்து ஈ.சி.ஆரில் கோயிலின் இடம் இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.