“இனி கம்யூனிட்டி சர்டிபிகேட்டோடத்தான் காதலிக்கணுமோ”-  பெற்றோரால் கவுரவக் கொலையான பெண்.. 

  0
  1
  representative image

  குஜராத் காந்திதாம் நகரில் பாரதி ராஜ்கோர் என்ற பெண்,தனது தாயார் ரஷ்மி (40), தந்தை ரமேஷ் (42) மற்றும் சகோதரர் மணீஷ் (21) ஆகியோருடன் தான் காதலிக்கும் தலித் வாலிபர்  மனோஜ் வாகேலாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் கோபமுற்ற தாயார்  ரஷ்மி பாரதியை தலையணையால் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

  gujarat

  இந்த சம்பவம் பிப்ரவரி 27 ஆம் தேதி தாமதமாக காந்திதாமின் புறநகரில் உள்ள கிடானா கிராமத்தில் உள்ள கைலாஷ் சொசைட்டியில் உள்ள அவர்கள்  வீட்டில் நடந்தது.அந்த பெண்ணின் குடும்பத்தினர்  அந்தப் பெண்ணைக் கொலை செய்தபின்,அவரது துப்பட்டாவின் உதவியுடன் ஒரு அறையில்  அவரது உடலைத் தூக்கிலிட்டனர்,பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தெரிவித்தார்கள்.விரைந்து வந்த போலீசார் பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது .இதனால் போலீசார் அந்த பெண்ணின் குடும்பத்தினரை விசாரித்தபோது அவர்கள் மகளை காதல் தகராறில் கொன்றதை ஒப்புக்கொண்டனர் .பிறகு போலீசார் மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .