இனி எல்லாமே மாறும்! அதிரடியாய் இறங்கிய கலெக்டர்! குவியும் பாராட்டுக்கள்!

  0
  1
  கலெக்டர் விஜய கார்த்திகேயன்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியான ஒரு அதிகாரி, நிஜமாகவே மக்கள் பணியை செய்ய நினைத்தால், நம் நாடு எப்படியிருக்கும் என்று பொதுமக்கள் பேசும் அளவிற்கு இருக்கிறது திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனின் நடவடிக்கை. மக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். இத்தனைக்கும் இவர் புதிதாய் கொண்டு வந்த திட்டம், அத்தனை வேகமாக செயல்படத் துவங்கி, உடனுக்குடன் தீர்வும் கிடைத்து விடுகிறதாம்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியான ஒரு அதிகாரி, நிஜமாகவே மக்கள் பணியை செய்ய நினைத்தால், நம் நாடு எப்படியிருக்கும் என்று பொதுமக்கள் பேசும் அளவிற்கு இருக்கிறது திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனின் நடவடிக்கை. மக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். இத்தனைக்கும் இவர் புதிதாய் கொண்டு வந்த திட்டம், அத்தனை வேகமாக செயல்படத் துவங்கி, உடனுக்குடன் தீர்வும் கிடைத்து விடுகிறதாம். கலெக்டர் ஆபீஸ் எங்கேயிருக்கு? கலெக்டர் எப்போ வருவார்? கலெக்டர் டேபிளுக்கு போயிருக்கும்மா… அடுத்த வாரம் வந்து பாருங்க… என்று கடைநிலையில் இருக்கும் ஊழியர்கள் எல்லாம் டேபிளுக்கும் மேலும், டேபிளுக்கு கீழும் காசு வாங்க முடியாது… காரணங்களைச் சொல்ல முடியாது… இதைப் பற்றி கேட்டால், இனிமே இப்படி தான்.. எல்லாமே மாறும்.. எல்லா இடத்துலேயும் மாறும்’ என்று சிரிப்பையே பதிலாகத் தருகிறாராம் கலெக்டர் விஜய கார்த்திகேயன்.

  vijay karthikeyan

  அப்படியென்ன திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளை, 97000 41114 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். அப்படி வரும் புகார்களை பெறுதல், பெற்ற குறைகளை சம்பந்தப்பட துறைக்கு விரைந்து விநியோகித்தல், விரைந்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் விமர்சனக் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல்னு செயல்படும். இதுக்காக பிரத்யேக குழு மொபைல் எண் மூலம் கண்காணிக்கும். குறைதீர்ப்பு மனுக்களை எந்த வித தாமதமும், தள்ளி வைப்பும் இல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்வது தான் நோக்கம். இதே போல், நாங்கள் இதை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்த முயற்சிப்போம் என்கிறார் கலெக்டர் விஜய கார்த்திகேயன். நல்ல மாற்றம் தான். லஞ்சம் வாங்கி காலத்தை தள்ளும் அதிகாரிகள் இனியாவது இதைப் பார்த்து திருந்தினால் சரி..