‘இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது’ சுஜித் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்!

  0
  5
   சுஜித்  

  பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  குழந்தை சுஜித்  மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க 80 மணிநேரத்தையும்  கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்த நிலையில் நேற்றிரவு 2.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  sujith

  சுஜித் மீண்டு வருவான் என்று நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. சுஜித்தின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

   

  இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘மீள முடியா துயரம்!
  என்னால எதும் செய்ய முடியல அப்பிடின்னு நெனச்சு அழுக வருது.போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை.இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது.அவங்க அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க.என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே #Sujith #RIPSujith’ என்று பதிவிட்டுள்ளார்.