இனிமேல் பேஸ்புக்கில் ‘அதுமாதிரியான’ போஸ்ட் போட முடியாது

  0
  2
  facebook

  பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான கட்டுபாடுகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதே சமயம் புதிய வசதிகளையும் பயனாளர்களுக்கு சேர்க்கும் விதமாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

   பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான கட்டுபாடுகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதே சமயம் புதிய வசதிகளையும் பயனாளர்களுக்கு சேர்க்கும் விதமாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

  தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, இனி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படும் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தவிர, ஆபாசமாகவும், குறிப்பிட்ட தனிநபரைப் பற்றிய போஸ்ட்களையும், தரக்குறைவான விமர்சனங்களை உள்ளடக்கிய போஸ்ட்களையும் அந்நிறுவனம் நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. 

  fb

  இது மாதிரியான போஸ்ட்களையும், தரக்குறைவான கருத்துகளும் எழுதப்படும் பதிவுகளையும் நீக்கும் வகையில் பேஸ்புக் தனது தள அமைப்பில் மாற்றங்களை செய்து இருக்கிறது. அதேபோல், சில குறிப்பிட்ட இடங்களில், பார்வார்ட் செய்யும் எண்ணிக்கையையும் வரைமுறைப்படுத்த உள்ளது. குறிப்பாக மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் இனிமேல் கண்டிப்பாக பேஸ்புக்கில் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  தனிநபரோ, நிறுவனமோ வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளைச் செய்தால், அவர்களைத் தொடர்ந்து முகநூல் உபயோகிக்க தடை செய்யவும் முடிவு செய்திருக்கிறது. இதற்கென பேஸ்புக் நிறுவனத்தில் தனி குழு வேலை செய்வார்கள். அந்த குழு, தேவையில்லாத, ஆபாசமான, பேஸ்புக் கம்யூனிட்டியின் விதிமுறைகளை மீறுகிற பதிவுகளை உடனுக்குடன் நீக்கி விடுவார்கள். 

  அதே சமயம், வதந்தியான செய்திகளையும், குறிப்பிட்ட இடங்களில் வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளையும், மக்களிடையே மன அழுத்தத்தையும், தேவையற்ற பயத்தையும் உருவாக்கும் பதிவுகளையும் உடனுக்குடன் கண்காணித்து அந்த குழு நடவடிக்கை எடுக்கும்’ என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதே முறையை பிரபலங்களுக்கும் பேஸ்புக் பின்பற்ற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, முகநூலில் பிடிக்காதவர்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்பினாலோ, ஆபாசமான பதிவுகளைச் செய்தாலோ, தனி நபரின் பெயரைக் கெடுக்கும் விதமான பதிவுகளைப் பகிர்ந்தாலோ, முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும். உடனடியாக அவ்வாறு செய்பவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

  இந்த வகையான பதிவுகளை, இதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் புகாராக கூற முடியும். பேஸ்புக் நிறுவனம் இதிலும் அதிரடியாக விதிகளைத் தளர்த்தியுள்ளது. இனி, இம்மாதிரியான பதிவுகளை, தனிநபரை கேலி செய்யும் வகையில் இருக்கும் பதிவுகளை சம்பந்தபட்டவர்கள் மட்டுமல்லாது, வேறு யார் வேண்டுமானாலும் ரிப்போர்ட் செய்து, அந்த பதிவுக்கெதிராக நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளது.