இந்த 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

  33
  மழை

  வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

  பருவமழை கடந்த மாதம் முடிந்த நிலையில் தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்குக் கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. அதே போலக் கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில் பெய்தது. 

  ttn

  இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி,கன்னியாகுமரி , திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.