இந்த 7 விஷயங்களால் ஆண்கள் இம்ப்ரெஸ் ஆக மாட்டார்கள் பெண்களே! – உங்களை மாத்திக்கோங்க

  78
  7 Things That Girls Think Impress Guys But They Don’t

  ஆண்களை கவர்வதற்காக சில விஷயங்களை உலகில் உள்ள அனைத்து பெண்களுமே தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. ஆண்கள் அத்தகைய விஷயங்களால் நிச்சயம் ஈர்க்கப்படுவதில்லை. ஆண்களை கவர பெண்கள் செய்யும் அந்த 7 விஷயங்கள் இதோ!

  ஆண்களை கவர்வதற்காக சில விஷயங்களை உலகில் உள்ள அனைத்து பெண்களுமே தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. ஆண்கள் அத்தகைய விஷயங்களால் நிச்சயம் ஈர்க்கப்படுவதில்லை. ஆண்களை கவர பெண்கள் செய்யும் அந்த 7 விஷயங்கள் இதோ!

  ttn

  டன் கணக்கில் மேக்கப்:

  ஒரிஜினாலிட்டியாக இருங்கள். நீங்கள் உண்மையில் யார் என்று தெரிந்து கொள்ளவே பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். உங்கள் உடல் தோற்றம் உட்பட இது பொருந்தும். பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள் தான். அதற்காக டன் கணக்கில் மேக்கப் போட்டுக் கொள்வதால் ஆண்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்க வேண்டாம். உண்மையான பெண்ணின் அழகையே ஆண்கள் விரும்புவார்கள். அதுதான் கடைசி வரைக்கும் நிரந்தரமும் கூட!

  ttn

  மிக உயரமான ஹை ஹீல்ஸ்:

  நீங்கள் எப்படி உடை அணிந்திருக்கிறீர்கள் என்று ஆண்கள் பார்ப்பார்களே தவிர உங்கள் ஹை ஹீல்ஸை அவர்கள் கொஞ்சம்கூட கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே உங்கள் உடல்வாகுக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து அணியுங்கள்.

  ttn

  காரணமே இல்லாமல் ஒதுங்கி இருப்பது:

  தாங்கள் விரும்பும் ஆணின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல பெண்கள் செய்யும் தவறு இது. அதாவது சில சமயங்களில் காரணமே இல்லாமல் தாங்கள் விரும்பும் ஆணிடம் இருந்து ஒதுங்கி இருப்பது போல நடிப்பது. இதனால் ஆண்கள் கடுப்பாவார்களே தவிர. இம்ப்ரெஸ் ஆக மாட்டார்கள்.

  ttn

  எல்லாவற்றுக்கும் ‘யெஸ்’ சொல்வது:

  தங்களுக்கு பிடித்தமான ஆண் எதை சொன்னாலும் ‘யெஸ்’ சொல்வதன் மூலம் அவர்களை இம்ப்ரெஸ் செய்யலாம் என பெண்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படிப்பட்ட பெண் நாளடைவில் ஆணுக்கு போரடிக்க தொடங்கி விடுவாள். அதனால் இப்படிப்பட்ட பெண்கள் மேல் ஆண்களுக்கு அவ்வளவாக விருப்பம் எழாது.

  ttn

  அறிவுத் திறனை வெளிப்படுத்தாமை:

  ஆண்களிடம் பெண்கள் எதுவும் தெரியாதது போல காட்டிக் கொள்வார்கள். இந்த வழிமுறை மூலமாகவும் ஆணை கவரலாம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அறிவுத் திறன் கொண்ட பெண்கள் மேல் ஆண்களுக்கு அதிக காதல் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

  ttn

  தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்வது:

  தங்களுக்கு பிடித்தமான ஆணிடமிருந்து பாராட்டுக்களை பெறுவதற்காக தங்களைத் தாழ்த்திக் கொள்வது போல பல பெண்கள் நடிக்கிறார்கள். ஆனால் இது எப்போதும் ஒரு மோசமான யோசனையாகும். இதனால் உங்களை தன்னம்பிக்கை அற்றவராக ஆண்கள் நினைக்க வாய்ப்புள்ளது.

  ttn

  சோஷியல் மீடியாவில் பிரபலம்:

  பொதுவாக பெண்களுக்கு சமூக வலைதளங்களில் மிக எளிதாக பின்தொடர்பாளர்கள் கிடைத்து விடுவார்கள். அந்த எண்ணிக்கையை தங்களுக்கு விருப்பமான ஆணிடம் சொல்லி பெண்கள் மகிழ்வார்கள். இதனால் அவர்கள் இம்ப்ரெஸ் ஆவார்கள் என்று பெண்கள் கணக்கு போட்டால் அது முற்றிலும் தவறு. ரிலேஷன்ஷிப்பில் சமூக வலைத்தளம் தொடர்பான சாதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தாது.