இந்த 4 ராசிக்கும் இன்று பணவரவு உண்டு!

  0
  2
  பணவரவு

  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும்.

  சனிக்கிழமை (29-06-19) 
  ராகுகாலம்    காலை 9 முதல் 10.30 வரை
  எமகண்டம்    பகல் 1.30 முதல் 3 வரை
  நல்லநேரம்    காலை 7.45 முதல் 8.45 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை
  சந்திராஷ்டமம்    : அஸ்தம் காலை 8.39 வரை பிறகு சித்திரை
  பரிகாரம்    தயிர்

  மேஷம்: 
  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டு.  சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். 
  அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் ஏற்படக்கூடும்.

   ரிஷபம்: 
  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 
  கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும். 

  மிதுனம்: 
  மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். 
  மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 

  கடகம்: 
  இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். 
  புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம். 

  சிம்மம்: 
  மனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்த படியே இருக்கும். 
  மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். 

  கன்னி: 
  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். 
  உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

   துலாம்: 
  புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். 
  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும். 

  விருச்சிகம்: 
  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். 
  விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

   தனுசு: 
  உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். 
  மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும். 

  மகரம்: 
  அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். 
  உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும். 

  கும்பம்: 
  உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். 
  அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளும் அனுக்கிரகமும் உண்டாகும். 

  மீனம்: 
  காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மனதில் இனம் தெரியாத கலக்கம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. 
  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.