இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தால்.. ஆண்ட்ராய்டு 10 அப்டேட் உடேனே!!

  28
  ஆண்ட்ராய்டு 10

  எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டின் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது அந்த பட்டியலை இங்கு பார்ப்போம்.

  கூகுள் நிறுவனம் ஒவ்வொரு பத்து மாதங்களுக்கும் தனது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. தற்போது நடப்பில் இருக்கும் ஆண்ட்ராய்டு 9 (பை) வெர்ஷன் முன்னணி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து அப்டேட்டில் செய்து ஆண்ட்ராய்ட் 10 வெர்ஷன் விரைவில் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னர் வந்த வெர்ஷன்களின் பெயர்கள் இனிப்பு வகைகளைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

  எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டின் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது அந்த பட்டியலை இங்கு பார்ப்போம்.

  google

  கூகுள் நிறுவனம் ஒவ்வொரு பத்து மாதங்களுக்கும் தனது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. தற்போது நடப்பில் இருக்கும் ஆண்ட்ராய்டு 9 (பை) வெர்ஷன் முன்னணி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து அப்டேட்டில் செய்து ஆண்ட்ராய்ட் 10 வெர்ஷன் விரைவில் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னர் வந்த வெர்ஷன்களின் பெயர்கள் இனிப்பு வகைகளைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. உதாரணமாக, பை, ஓரியோ, நாவுகட், மர்ஷ்மல்லோவ் ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இனி அவ்வாறு இருக்காமல் ஆண்ட்ராய்டு 10 என நேரடியாக அழைக்கப்படும். இனிப்பு வகைகளின் பெயர்கள் சூட்டப்படாது என தெரிவித்தது. 

  ஆண்ட்ராய்டு பை வெர்ஷனைவிட அடுத்து வரவிருக்கும் ஆன்ட்ராய்டு 10 வெர்ஷன் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றங்களுடன் வெளிவர இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட்களை பெறவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்தது. வழக்கம்போல கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மொபைல்கள் முதலாவதாக இந்த அப்டேட்களை பெறும். அதைத் தொடர்ந்து மற்ற மொபைல்களிலும் இந்த அப்டேட்கள் வழங்கப்படும். எதிர்பாராத வகையில் விவோ, ஓப்போ, ரெட்மி, ஆசுஸ் போன்ற மொபைல்களுக்கும் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் ஓரிரு மாடல்கள் இந்த புதிய அப்டேட்டை வருகின்றன.

  android 10

  முழு பட்டியல் இதோ..

  – நோக்கியா ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் (Nokia Android One devices)
  – அசுஸ் சென்போன் 5இசெட் (AsusZenfone 5Z)
  – சியோமி மி ஏ2 மற்றும் மி ஏ3 (Xiaomi Mi A2 and Mi A3)
  – சியோமி மி 9 (Xiaomi Mi 9)
  – சியோமி மி மிக்ஸ் 3 5ஜி (Xiaomi Mi MIX 3 5G)
  – ஒன்பிளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro)
  – ஒன்பிளஸ் 7 (OnePlus 7)
  – ஒன்பிளஸ் 6டி (OnePlus 6T)
  – ஒன்பிளஸ் 6 (OnePlus 6)
  – ஒப்போ ரெனோ (OPPO Reno)
  – ரியல்மி 3 ப்ரோ (Realme 3 Pro)
  – ரியல்மி 5 (Realme 5)
  – ரியல்மி 5 ப்ரோ (Realme 5 Pro)
  – ரியல்மி எக்ஸ் (Realme X)
  – சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 (Sony Xperia XZ3)
  – டெக்னோ ஸ்பார்க் 3 ப்ரோ (Tecno Spark 3 Pro)
  – விவோ எக்ஸ்27 (Vivo X27)
  – விவோ நெக்ஸ் எஸ் (Vivo Nex S)
  – விவோ நெக்ஸ் ஏ (Vivo Nex A)
  – ஹூவாய் மேட் 20 ப்ரோ (Huawei Mate 20 Pro)
  – எல்ஜி ஜி 8 திங்க் (LG G8 ThinQ)