“இந்த வீடியோ பார்க்கிறது உங்க சொந்த ரிஸ்க்”… கிரிக்கெட்டை விட சோஷியல் மீடியாவில் பிஸியான தோனி! 

  23
  தோனி

  ந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான தோனி, கிரிக்கெட்டுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராணுவ பணிக்கு சென்றிருந்தார். அது முடிந்த பிறகும் கிரிக்கெட்டில் அவர் சேர்க்கப்படவில்லை. அதனால், அவர் சமூக ஊடகங்களில் அதிகம் தலைகாட்டி வருகிறார்.
  ஓய்வு நேரங்களில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது தோனியின் வழக்கம்.

  இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான தோனி, கிரிக்கெட்டுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராணுவ பணிக்கு சென்றிருந்தார். அது முடிந்த பிறகும் கிரிக்கெட்டில் அவர் சேர்க்கப்படவில்லை. அதனால், அவர் சமூக ஊடகங்களில் அதிகம் தலைகாட்டி வருகிறார்.
  ஓய்வு நேரங்களில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது தோனியின் வழக்கம். கரோக்கியில் நண்பர் ஒருவரின் இல்லத்தில் தோனிக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் தோனி இந்தி பாடல் ஒன்று பாடிய வீடியோவை அவரது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

  dhoni

  எச்சரிக்கை, இந்த வீடியோவை பார்ப்பது பார்ப்பவர்களின் ரிஸ்க் என்று அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மிகவும் திறமை மிக்க திரு மகி அவர்களே தயவு செய்து இப்படி செய்து என்னை கொல்லாதீர்கள். இருப்பினும் இந்த சிறப்பான தருணம் பகிரப்பட வேண்டியதுதான். சாக்‌ஷி நீங்களும் சீக்கிரம் வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் பழைய இந்தி பாடல் ஒன்றை தோனி பாடுகிறார். உடனே, கூடி இருந்தவர்கள் வாவ் வாவ் என்று கொண்டாடுகிறார்கள்.

  உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்குப் பிறகு தோனி ஓய்வு அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் சிலர் ஓப்பனாகவே கருத்து தெரிவித்தனர். ஆனால், எந்த ஒரு முடிவையும் அறிவிக்காத தோனி, கிரிக்கெட்டுக்கு இரண்டு மாத விடுப்பு எடுத்துக்கொண்டு ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ பணிக்கு சென்றார். அதன் பிறகு மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. 

  dhoni

  ஆனாலும் எந்த ஒரு கவலையும் இன்றி அல்லது அதை வெளிக்காட்டாமல் நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்களுடன் நேரத்தை செலவழித்து, அதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார் தோனி. என்ன செய்யப் போறீங்க தோனி என்பதுதான் அவரது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.