இந்த விஷயத்தில் ரஜினியும், விஜய்யும் தான் டாப்பு டக்கரு : ஆய்வில் வெளியான உண்மை!

  0
  2
  ரஜினி - விஜய்

  நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் இடம் பிடித்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் இடம் பிடித்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  amithabh

  ட்ரா என்னும் ஆய்வு நிறுவனமானது பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் நபர்களில் யார் யார் நம்பிக்கைக்குரிய மனிதர்கள் என்ற ஆய்வினை மேற்கொண்டது. அதில் பாலிவுட்டைப் பொறுத்தவரையில் 
  நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து அமீர் கான் இரண்டாவது இடத்தையும், சல்மான் கான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தீபிகா படுகோனேவும், இரண்டாம் இடத்தில் கத்ரீனா கைப்பும், மூன்றாம் இடத்தில் மாதுரி தீட்ஷித்தும் உள்ளார். மேலும் ஆறாவது இடத்தில் ஐஸ்வர்யா ராயும், 10-வது இடத்தில் சன்னி லியோனும் உள்ளனர். 

  rajini

  இதில் குறிப்பாகத் தென்னிந்தியப் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்தை  பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து  நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விக்ரமும் உள்ளனர்.

  virat

  விளையாட்டுத்துறையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தையும், 2-வது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும்  உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளார்.

  tra

  அதே போல் தொழில் துறையில் ரத்தன் டாடா முதலிடத்தையும், முகேஷ் அம்பானி நான்காம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில்  சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.