இந்த வாரம் 3 தினங்கள்தான் வர்ததகம் நடந்தது… ஆனால் ரூ.12.31 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 3,569 புள்ளிகள் உயர்ந்தது

  0
  1
  பங்கு வர்த்தகம்

  தொடர்ந்து 7 வாரங்களாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம் இந்த வாரம் ஏற்றம் கண்டது. ஒட்டு மொத்த அளவில் சென்செக்ஸ் 3,569 புள்ளிகள் உயர்ந்தது.

  மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. மேலும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. இருப்பினும் தொடர்ந்து 7 வாரங்களாக சரிவை மட்டுமே சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இந்த வாரம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் தொடர்பான சில நேர்மறையான தகவல்கள், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கியது உள்பட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இந்த வாரம் களைகட்டியது.

  கொரோனா வைரஸ்

  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.120.81 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.12.31 லட்சம் கோடி லாபம் சம்பாதித்து உள்ளனர்.

  பங்கு வர்த்தகம்

  நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்ததகத்தின் முடிவில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,568.67 புள்ளிகள் அதிகரித்து 31,159.62 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,028.10 புள்ளிகள் உயர்ந்து 9,111.90 புள்ளிகளில் முடிவுற்றது.