இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்? 

  0
  2
  கமல் ஹாசன்

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யார் வெளியே செல்லவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யார் வெளியே செல்லவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ்  சீசன் தொடங்கி 50 நாட்களை நெருங்கியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, ரேஷ்மா, மீரா மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி மற்றும் லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். 

  இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஒருவர் காப்பாற்றப்பட்டு மீதமுள்ள இரண்டு பேரிலிருந்து நாளை ஒருவர் வெளியேறுவர். கடந்த முறைகளை விட இந்த முறை நாமினேஷன் லிஸ்டின் நபர்கள் சற்று கமியாக இருப்பதால் இந்த முறை யார் வெளியேறுவர் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

  bb

  அந்த வகையில் மூன்று பேரில் சாக்ஷி அகர்வால் வாக்குகள் சற்று பின் தங்கியுள்ளதால் அவரே வெளியேறவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அல்லது இவரை வெளியேற்றி சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.