இந்த ராசிக்காரர்களெல்லாம் இன்று எச்சரிக்கையாக இருங்கள்!

  12
  ராசிபலன்

  மகிழ்ச்சியின் ஆதாரமாக குழந்தைகள் இருப்பார்கள். இந்த நாள் இனிமையாக இருக்கும்.

  இன்றைய ராசிபலன்
  8.12.2019  ஞாயிற்றுக்கிழமை
  நல்ல நேரம்
  காலை 7.45 மணி முதல்  8.45 வரை
  மாலை 3.15 மணி முதல் 4.15 வரை
  ராகு காலம்
  மாலை 4.30 மணி முதல்  6 வரை
  எமகண்டம்
  பிற்பகல்  12 மணி முதல்  1.30 வரை
   

  மேஷம்
  வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.  புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரைபடி உங்கள் பணத்தை முதலீடு செய்வது தான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக குழந்தைகள் இருப்பார்கள். இந்த நாள் இனிமையாக இருக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 8
  ரிஷபம் 
  உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உபரியாக கிடைத்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். உங்களின் நம்பிக்கை, தொழில் வாழ்வில் நல்ல பலனை ஏற்படுத்தும். உங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஏற்கும்படி செய்ய அந்த நம்பிக்கை உதவும். 
  அதிர்ஷ்ட எண்: 7
  மிதுனம் 
  மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். விண்ணப்பம் அனுப்ப, நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 5
  கடகம் 
  அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். வீட்டில் ரிப்பேர் வேலையை முடிப்பதில் பிசியாக இருப்பீர்கள். காதலில் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 9
  சிம்மம் 
  நீங்களாக மருந்து சாப்பிடுவது, அதை சார்ந்திருப்பதாக ஆகிவிடும். எந்த மருந்து சாப்பிடும் போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.  சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 7
  கன்னி 
  அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள். ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும்.  அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம்.  கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். 
  அதிர்ஷ்ட எண்: 5
  துலாம் 
  நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். 
  அதிர்ஷ்ட எண்: 8
  விருச்சிகம் 
  உடல் நலம் நன்றாக இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள் தான் மையமானவராக இருப்பீர்கள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். எந்த பிசினஸ் / சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 1
  தனுசு 
  ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்த வரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 7
  மகரம் 
  தேவையற்ற எதையாவது வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். வாக்குவாதத்தால் எதையும் பெறப் போவதில்லை என்றும், சிலதை இழக்கத்தான் செய்வீர்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும்.  எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 7
  கும்பம் 
  பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும்.  உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். 
  அதிர்ஷ்ட எண்: 4
  மீனம் 
  மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்த வரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. நீங்கள் இதுவரை செய்ய விரும்பிய வேலை இன்று அலுவலகத்தில் உங்களை தேடி வரும்.
  அதிர்ஷ்ட எண்: 2