’இந்த தேர்தல் செல்லாது…’ மறுதேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி… பாஜகவை பதற வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..!

  0
  4
  மோடி

  பாஜக அரசு இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டதாக போராட்டம் செய்து கலவரத்தை ஏற்படுத்தி இந்தியாமுழுவதும் பதற்ற நிலையை உருவாக்கி மறு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இன்னும் ஐந்தே நாட்களில் இந்தியாவை ஆளப்போவது யார் என தெரிவிந்து விடும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க, எதிர்கட்சிகள் மறுதேர்தலை நடத்த சூழ்ச்சி செய்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி பதற்றத்தை பற்ற வைத்துள்ளது. modi

  மக்களவை தேர்தலில் 6 கட்டங்கள் முடிந்து இறுதிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மீண்டும் மோடியே பிரதமராக முடிசூடுவார் என உளவு துறை ரிப்போர்ட் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  வரும் 23 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை நடைபெற  உள்ளது. அன்று மதிய வேளைக்கு பிறகு  சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. soniya gandhi

  அப்போது, ஒருவேளை மோடி அரசுக்கு 273 என்ற பெரும்பான்மைக்கு உரிய இடங்கள் கிடைக்காமல் போனால் , பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர மீதமுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி ஆட்சி அமைப்பதுகுறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.  பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதும் இ.வி.எம் இயந்திரத்தின் மீதும் புகார் கூறி இந்தியா முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்துள்ளதாகவும்,  பாஜக அரசு இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டதாக போராட்டம் செய்து கலவரத்தை ஏற்படுத்தி இந்தியாமுழுவதும் பதற்ற நிலையை உருவாக்கி மறு தேர்தல் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும் உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.soniya gandhi
   
  இதற்கு காரணம் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் அது எதிர்க்கட்சிகளுக்கு பின்னடவைகாகவும், எதிர் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்கிற அச்சமும் அவர்களுக்கு உருவாகும். அதனை சீர்குலைத்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை உளவு துறை மூலம் அறிந்த பாஜக ஆளும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் காவல் துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தி உள்ளனர்.