“இந்த காலத்தில இப்படியும் ஏமாறுவாரா “மேஜிக் சொம்புன்னு சொன்னாராம் ..அதை நம்பி 2 கோடி  தந்தாராம்..  

  0
  6
  representative image

  ஆந்திராவைச் சேர்ந்த மராத்தள்ளியில் உள்ள முனகோலாலுவைச் சேர்ந்த என்.பி.மகேஷ் ஒரு  ட்ராவல் ஏஜென்சி நடத்தி வந்தார். அவரிடம் 2019ம் ஆண்டு  சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்கள் சிதானந்தபாபு மற்றும் நாகராஜ் ஆகியோர் வியாபார விஷயமாக பேச வந்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் ஒரு தானியங்களை கொட்டும் ஓர் மாஜிக் பாத்திரமிருப்பதாகவும் அதன் மூலம் தாங்கள் பணம் சேர்ந்ததாகவும் கூறி அந்த மாஜிக் பாத்திரத்தை காமித்தனர்.

  ஒரே வருடத்தில் மாஜிக்  பாத்திரம் மூலம் பணத்தை இரண்டு மடங்காக்கி தருவதாக ஒரு தொழிலதிபரிடம் இரண்டு கோடி ரூபாய் ஒரு கூட்டம் ஏமாற்றியுள்ளது.
  ஆந்திராவைச் சேர்ந்த மராத்தள்ளியில் உள்ள முனகோலாலுவைச் சேர்ந்த என்.பி.மகேஷ் ஒரு  ட்ராவல் ஏஜென்சி நடத்தி வந்தார். அவரிடம் 2019ம் ஆண்டு  சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்கள் சிதானந்தபாபு மற்றும் நாகராஜ் ஆகியோர் வியாபார விஷயமாக பேச வந்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் ஒரு தானியங்களை கொட்டும் ஓர் மாஜிக் பாத்திரமிருப்பதாகவும் அதன் மூலம் தாங்கள் பணம் சேர்ந்ததாகவும் கூறி அந்த மாஜிக் பாத்திரத்தை காமித்தனர்.
  அதனால் தங்கள் 2 கோடிரூபாய் கொடுத்தால் அதை ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக இந்த பாத்திரம் மூலம் பெருக்கி காமிப்போம் என்று கூறினார்கள். அவர்களின் பேச்சை நம்பிய மகேஷு அவர்களிடம் பல தவணையாக 2 கோடி ரூபாயை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள் அதற்கு பிறகு காணாமல் போனார்கள். மகேஷ் அவர்களுக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் போலீசில் புகார்  தந்தார், போலிசார் விசாரித்து அவர்களை பிடிக்க ஒரு தனிப்படையை அமைத்துள்ளனர்.