‘இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்’ லாஸ்லியா குறித்து மனம் திறந்த சேரன்

  0
  2
  கிரிவலம்

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.

  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் லாஸ்லியாவுடன் இருந்த உறவு குறித்து சேரன் மனம் திறந்து பேசியுள்ளார். 

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது.  இந்த சீசனில் பாசம், காதல், சண்டை, நட்பு என பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததாலும் போட்டியாளர்கள் சாகப்போட்டியாளர்களின் வீடுகளுக்குச் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ஜாலியாக உள்ளனர்.

  chjeran

  முக்கியமாக இந்த வீட்டில் சேரன் – லாஸ்லியா இருவருக்கும் இடையே நடந்த அப்பா -மகள் உறவு பல இடங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலமுறை லாஸ்லியா சேரனை உதாசீனப்படுத்தியும் சேரன் அதை பொருட்படுத்தாமல் பதிலுக்கு  பாசத்தை மட்டுமே லாஸ்லியாவுக்கு கொடுத்தார்.

  rajavuku check

  இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார். இதில்  இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  cheran

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சேரன் பேசும் போது, வாழ்க்கையில்  நான் அப்பா என்று உணர்கின்ற தருணம் மிகவும் உன்னதமானது. அதை கடவுள் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. உண்மையாக நேர்மையாக இருந்தேன். போலியாக நடிக்கவில்லை. அப்பா – மகள் பாசத்தை நான் பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்’ என்றார்.