இந்த ஆண்டு சந்திரயான் 3 நிலவுக்கு செல்லும்…. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..

  0
  7
  meat shop

  இந்த ஆண்டு சந்திரயான்-3 நிலவுக்கு ஏவப்படும் என மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், அது சிக்கனமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

  2008ம் ஆண்டு சந்திரயான் 1 மிஷன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. சந்திரயான்-2 இந்த ஆண்டு ஜூலையில் ஏவப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலவின் நிலப்பரப்பை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் விக்ரம் லேண்டர் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் தோல்வியில் முடிவடைந்தது.

  இஸ்ரோ

  இதனால் கொஞ்சம் மனம்தளராத இஸ்ரோ மீண்டும் நிலவு திட்டத்தை தொடங்கியது. சந்தியான் 3 விண்கலத்தை உருவாக்கும் பணியினை தொடங்கியது. இந்த ஆண்டு சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு  கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை இது குறித்து அதிகாரப்பூர்வமான எதுவும் தெரிவிக்கவில்லை.

  ஜிதேந்திர சிங்

  இந்நிலையில் நாட்டின் மூன்றாவது நிலவு மிஷன் குறித்து மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் டைம்ஸ் ஆப் இந்தியா கேள்வி கேட்டு இருந்தது. அதற்கு ஜிதேந்திர சிங், இந்த ஆண்டு சந்திரயான் 3 நிலவுக்கு செல்லும். மேலும் இந்த மிஷன் மிகவும் சிக்கனமானதாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளது. ஆகையால் நாம் செலவினத்தை குறைக்கிறோம். சந்திரயான் இந்த முறை லேண்டர் மிஷனை மட்டும் எடுத்து செல்லும் என தெரிவித்தார்.