இந்து கோவிலில் வழிபாடு செய்த இங்கிலாந்து பிரதமர் : தமிழ்வாழ் மக்களை கவரும் டெக்னிக் !

  26
  England president

  இந்த கோவிலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனும் அவரது மனைவி கேரி சைமன்ட்ஸும் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

  லண்டனில் மிகவும் பிரபலமான சுவாமிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனும் அவரது மனைவி கேரி சைமன்ட்ஸும் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். வரும் 12 ஆம் தேதி இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது.

  ttn

  இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இங்கிலாந்து பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின் முதற்கட்டமாக இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்வாழ் மக்களைக் கவரும் விதமாக இந்து கோவிலுக்கும் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மனைவி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் விதமாக சிவப்பு நிற சேலை உடுத்திக் கொண்டு கோவிலுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  ttn

  சுவாமி தரிசனத்துக்குப் பிறகு பொது மக்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். அவரது முயற்சிக்கு, பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும் எனது அரசு முழு ஆதரவை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.