இந்தி திணிப்பு: போராட்டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

  0
  1
  MK stalin

  இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

  இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

  இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

  MKS

  இந்தி திணிப்பு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி போராட்டம் நடத்த திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  “எந்த நிலையில் இந்தி திணிக்கப்பட்டாலும் திமுக எதிர்க்கும். தமிழகம். அமித்ஷா தாய்மொழியை தாண்டி எந்த மொழி படித்தாலும் அது இந்தியாக இருக்க வேண்டும் என விளக்கமளித்தது திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். எனவே வருகிற 20 தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தர்காலிகமாக ஒத்துவைக்கப்படுகிறது” என்று கூறினார்.