இந்திய விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் ராயல் என்ஃபீல்ட் 650சிசி மாடல்கள்..!

  0
  2
   ராயல் என்ஃபீல்ட் 650சிசி

  650சிசி இல் வெளிவந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்திய சந்தை விற்பனையில் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.

  அன்று முதல் இன்று வரை ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இந்திய சந்தையில் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு, அந்நிறுவனமும் அவ்வப்போது புது புது மாடல்களை வெளியிட்டு பயனாளர்களை கவர்ந்து வருகிறது.

  royal enfield 650cc

  இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு 650 சிசி இரண்டு புதிய பைக்குகளை அறிமுகம் செய்தது. கான்டினென்டல் ஜிடி 650சிசி மற்றும் இன்டர்செப்டார் 650சிசி இந்த இரண்டு பைக்குகள் இந்திய ஷோரூம்களில் விற்பனைக்கு வந்தது. வெளிவந்த 10 மாதங்களில் இதுவரை சுமார் 15 ஆயிரம் யூனிட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இது இதுவரை கண்டிராத அளவிற்கு அதிக அளவிலான விற்பனையாகும்.

  இன்டெர்செப்ட்டார் 650 மாடல்கள் பைக்குகள் 60களில் வந்த இன்டெர்செப்ட்டார் மாடலின் வடிவமைப்பு மற்றும் எஞ்சினை சார்ந்து தற்போதைய இன்டெர்செப்ட்டார் வடிவமைக்கப்பட்டதால், அனைவராலும் கவரப்பட்டது. கான்டினென்டல் ஜிடி 650 மாடல், 50களில் வெளிவந்த கான்டினென்டல் ஜிடி 250 மாடலை போலவே இருந்ததால், இதுவும் பலராலும் ஈர்க்கப்பட்டது.

  royal enfield

  இதுபோன்ற பழைமையான மாடல்களுக்கு தற்போது வரை வரவேற்புகள் இருப்பதால், மேலும் சில பழைமை சார்ந்த மாடல்களை வெளியிட என்பீல்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.